திருக்குறள்
– சிறப்புரை : 388
முறைசெய்து
காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்
படும். – 388
நெறிமுறை
தவறாது ஆட்சி செய்து மக்களைப் பாதுகாத்துவரும் மன்னன் மக்களுக்கெல்லாம் இறைவன் என்று
போற்றப்படும் சிறப்பை அடைவான்.
“ நெல்லும்
உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.” – புறநானூறு.
இவ்வுலகத்தார்க்கு
நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று அரசனே உயிராவான் ; மக்கள் உடலாவர்.( உடலுக்கு வரும்
துன்பத்தை, உயிர் தாங்குமன்றோ…!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக