திருக்குறள்
– சிறப்புரை : 392
எண்ணென்ப ஏனை
எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும்
உயிர்க்கு. – 392
ஆறறிவு உடைய மக்களுக்கு நல்வழிகாட்டும்
இரு கண்களைப் போன்றவை எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டுமே.
“ எம்மை உலகத்தும்
யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.” – நாலடியார்.
அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து, கல்வியைப்போல் வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக
நாம் அறியவில்லை.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக