திருக்குறள்
– சிறப்புரை : 387
இன்சொலால் ஈத்தளிக்க
வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ்
வுலகு. – 387
குடிமக்கள் போற்றுமாறு இனிய சொற்களை
உவந்து கூறும் இயல்புடைய மன்னனுக்கு அவன் விரும்பியவாறு
எல்லா நலன்களும் கொண்டதாக இவ்வுலகம் அமையும்.
“ அலத்தல் காலை
ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.” – புறநானூறு.
உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப்
பாதுகாக்கும் வல்லமையுடையவன் அதியமான், அவன் தாள் வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக