திருக்குறள்
– சிறப்புரை : 398
ஒருமைக்கண்
தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்
புடைத்து. -398
ஒரு
பிறவியில் ஒருவன் பெற்ற கல்வியறிவு, அவன் தோற்றும் தன் தலைமுறைக்கும் தொடர்ந்துவந்து
பாதுகாவலாக அமையும்.
“ கற்றுத் துறைபோய
காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் – முற்றத்
துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்த எலாம் துன்பம் அலாது இல்.” – நீதிநெறி விளக்கம்.
(இறந்த
எலாம் – ஏனையவை எல்லாம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக