திருக்குறள்
– சிறப்புரை : 397
யாதானும் நாடாமால்
ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங்
கல்லாத வாறு. – 397
கல்வி
கற்று அறிவிற் சிறந்த ஒருவனுக்கு, எந்த நாடும் சொந்த நாடாகும் எந்த ஊரும் சொந்த ஊராகவே காட்சியளிக்கும் இத்தகைய
பெருமைகளைப் பெற விழையாமல் ஏன் ஒருவன் தான் இறக்கும்வரை கல்வியறிவு பெறாமல் வீணே காலத்தைக்
கழிக்கிறான்..?
”கற்றோற்குச்
சென்ற இடமெல்லம் சிறப்பு.” – வாக்குண்டாம்.
“ ஆற்றவும்
கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
நால்திசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆம் …” – பழமொழி நானூறு.
ஆன்ற கல்வியறிவு உடையார் சொல், செல்லாத நாடு நான்கு
திசைகளிலும் இல்லை ; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; அவருடைய நாடுகளேயாம்..
நன்று.
பதிலளிநீக்கு