திருக்குறள்
– சிறப்புரை : 420
செவியின் சுவையுணரா
வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும்
என். 420
கேள்வியறிவின்
சுவை உணராது வாய்ச்சுவவையினை மட்டும் தேடி அலையும் மாக்கள் இருந்தால் என்ன ; இறந்தால் என்ன…? (இரண்டுமே ஒன்றுதான்.)
” கற்றாங்கு
அறிந்து அடங்கி தீதுஒரீஇ நன்று ஆற்றி
பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே
பற்றுவதே பற்றி பணியற நின்று ஒன்று உணர்ந்து
நிற்பாரே நீள்நெறிச் சென்றார்.” …..நீதிநெறி விளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக