திருக்குறள்
– சிறப்புரை : 401
கல்லாமை
அரங்கின்றி
வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக்
கோட்டி கொளல்.- 401
கற்க
வேண்டிய நல்ல நூல்களைக் கற்காத ஒருவன் சான்றோர் அவை நின்று உரையாற்றி வெல்ல நினைப்பது, ஆடுகளமின்றிக் காய்களை உருட்டுவது போன்றதாம்.
“ கற்றான் தளரின்
எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால் முரியும்.” – நான்மனிக்கடிகை.
கல்னியறிவு
உடையோன் தளர்வானேல் எப்படியேனும் உய்வான் ; கல்லாத பேதை தளர்வானேல் முயற்சி கெட்டு
அழிவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக