திருக்குறள்
– சிறப்புரை : 416
எனைத்தானும்
நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை
தரும். 416
செவிமடுத்துக்
கேட்பவை சிற்றுரையாயினும் நல்லனவற்றைக் கேட்க ; அஃது ஒருவனுக்கு நிறைந்த பெருமையைத்
தரும்.
“ தம்மின் மெலியாரை
நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று.” ~ நீதிநெறி விளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக