திருக்குறள்
– சிறப்புரை : 421
43.அறிவுடைமை
அறிவற்றங் காக்குங்
கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ~ 421
அறிவு
என்பது அழிவு வாராமல் காக்கும் கருவியாகும் மேலும் பகைவராலும் உள்ளே நுழைந்து அழிக்கமுடியாத மனவலிமை என்னும் பாதுகாப்பையும் தருவதாகும்.
“ அறிவு எனப்படுவது
பேதையார் சொல் நோன்றல்” ~ கலித்தொகை .133.
அறிவு
எனப்படுவது அறியாதார் கூறும் சொற்களைப் பொறுத்துக்
கொள்ளுதலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக