திருக்குறள்
– சிறப்புரை : 446
தக்கார் இனத்தனாய்த்
தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது
இல்.
----
௪௪௬
தகுதியும் திறமையும் வாய்ந்த சான்றோர் ஒருவரைத் தனக்குத் துணையாகக் கொண்டு
தானும் அறவழியில் நடக்கும் வல்லமை உடைய ஒருவனுக்குப் பகைவர்கள் செய்யக்
கூடியதொரு
தீங்கு இல்லை
என்பதாம்.
“
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து
அமைந்த சொல்லார் கறுத்து,” – நாலடியார்.
பல நூல்களையும் ஆராய்ந்து, அந்நூல்கள் கூறும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம்
பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக்
கூறமாட்டார்கள்.
ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. ...தொடர்ந்து தங்களின் பதிவுகளைப் படித்து பல அரிய செய்திகளை அறிகிறேன் ஐயா. நன்றி.
பதிலளிநீக்கு