வியாழன், 30 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –350.. .கன்னி முத்தம்....

 தன்னேரிலாத தமிழ் –350.. .கன்னி முத்தம்....!

……………….10………………

எண்ணக் கனவுகளில்

வண்ண நிலவாய்

வந்து போனவளே

இன்னமுதும் நீயே

இந்திரர் அமிழ்தமும் நீயே

உன்னைக்

கண்டவர்க்கு

உறக்கமேது?

உண்டவர்க்கு

இறப்பேது..?

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

புதன், 29 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –349.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –349.. .கன்னி முத்தம்....!

……………….9………………

கண்ணே…..

ஒளிவீசும் உன்மேனி

ஞாயிறு

குளிர்தரும் உன்முகம்

திங்கள்

ஒட்டி உறவாடி

உவந்த போது

தேனாய் இனித்தது

செவ்வாய்

புதனும் வியாழனும்

வெள்ளியும் சனியும்

செவ்வாய்த் தேன் போலவே.


-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

 

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –348.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –348.. .கன்னி முத்தம்....!

……………….8………………

கண்ணே….

காத்திருக்க நேரமில்லை

கண்ணைத் திற

உன்னுள்

 என்னைக் காணவேண்டும்.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

திங்கள், 27 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –347.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –347.. .கன்னி முத்தம்....!

……………….7………………

இளமைக் கனவே

இன்ப ஊற்றே

பராசக்தியே..

உன்னைப்

பாரா சக்தி

எவருக்கேனும் உண்டோ…?

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

சனி, 25 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –346. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –346. .கன்னி முத்தம்....!

……………….6………………

முனிவர்களே…!

முற்றும் துறந்து

முடிவில் எதைக் கண்டீர்?

கற்றுத் தேருங்கள்

காதல் பாடங்களை

இன்ப வடிவாய்

இறைவன் இருப்பதை அறிவீர்..!

காமத்தை வெல்லுதல்

கடவுளுக்கும் எளிதன்று.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –345. .கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –345. .கன்னி முத்தம்....!

……………….5………………

காமத் தீ

காட்டுத் தீயாகி

என்னைச் சுட்டெரித்த போது….

கொட்டும் அருவியில்

குளித்தது போலாயிற்று

ஒரு

மொட்டு மலர்ந்து

முத்தமிட்ட போது…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

வியாழன், 23 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –344. .கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –344. .கன்னி முத்தம்....!

……………….4………………

கட்டுண்டோம்

களித்திருப்போம்

காலை வரும் வரை….!

புலர்ந்தது பொழுதென்று

புலம்பிட வேண்டாம்

மாலை வரும் வரை

மயக்கத்தில் இருப்போம்.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

 

புதன், 22 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –343.கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –343.கன்னி முத்தம்....!

……………….3………………

பகலில் நிலவாய்

பார்த்ததினால்

இரவில் சூரியனாய்

எரிகின்றாய்..!

கொதிக்கும் என் உடல் மீது

கொட்டு உன்

முத்த மழையைக்

குளிர்ந்திட குளிர்ந்திடக்

கொட்டிட வேண்டும்

என்றும் அந்த

ஈரம் காயாமல்

இருந்திட வேண்டும்..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.-----

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2................

அல்குல் கண் தோள்

என மூன்றும் பெருத்து

நுதல் அடி நுசுப்பு

என மூன்றும் சிறுத்து

இன்னிசை யாழின்

செவ்வழிப் பண்ணேயன்ன

பெண்ணே….!

காரிருள் விளக்கு போல்

கண்கள் ஒளி விச

காமக் குறிப்பின்

கலங்கரை விளக்கமாய்

மேகலையும் சிலம்பும்

மெல்லவே புலம்ப

அன்னமேநீ

அடியெடுத்து வாராய்..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

திங்கள், 20 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2.................

மாணிக்கத் தூண் தாங்கும்

மரகதமணி மண்டபத்து!

முற்றம் முழுதும்

தூமலர் தூவி

மாவிலைத் தோரணம்

மஞ்சள் குங்குமம் பொலிய

மங்கல மங்கையர் கூடி

இலவங்கம் பச்சிலை

நாகணம் கொட்டம்

நன்னாரி  கத்தூரி

இலாமிச்சம்

குவளை மல்லிகை

மனோரஞ்சிதம் முல்லை

சண்பகம் மகிழம் மணக்கும்

சந்தன நறுநீராட்டி….

கத்தூரி எண்ணெய்

கற்பூரம் புனுகுபூசி

அகிற்புகை இட்டு

ஐம்பால் கூந்தல் அழகுற

சுருண்முறை வகுத்துக்

கருங்குழல் கட்டி

நறுமலர் சூட்டித்

திருநுதல் சுட்டித்

திகழச் சூட்டி

மலரும் மணியும்

முத்தும் பவழமும்

பொனணி பலவும்

மின்னும் மேனியில்

ஒளி மங்க….

பால் நுரை போலும்

பட்டுடை வருத்த

மங்கல ஒலியால்

மன்றம் நிறைய

பொன் தவிசு அமர்ந்த

பொற்பூ மணக்க..!...................தொடரும்…………..

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2.................

பூவே நீ

பூத்தது இன்று தானோ..?

உருவும் திருவும் நிறைந்த

பருவமே வருக..!

பசுஞ்சோலையே வருக

பைந்தமிழே வருக

சூரியன் ஒளி புகா சோலையுள்

வெள்ளிய நீரருவி

விளங்கிடும்

பளிங்கு நீரோடை!

வாழை மா பலா

புன்னை தென்னை சூழ

தென்றல் தழுவ..

தேனடை சிதற..

மந்திகள் உண்டு

மயக்கத்திலிருக்க

மயில் அகவ..

குயில் கூவ

அன்னம் அசைய

மழலை வண்டினம்

நல்யாழ் இசைக்க

வண்ண மலர்

வாச மலர்

பூத்துக் குலுங்கும்

தண்பொழில் நடுவே….!

இலங்கை வேந்தனின்

எழில் மாடம் இயற்றிய

தேவதச்சன் விருப்போடு புனைந்த

தங்கத் தகடு வேய்ந்த ………………தொடரும்……

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995. .

 

சனி, 18 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –341.கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –341.கன்னி முத்தம்....!

 .......1.......

அங்கிங்கெனாதபடி

எங்கும் நிறைந்திருக்கும்

அருட்பெருஞ் சக்தியே!

கருணைக் கடலே!

காதல் கனிதரும் கற்பகத் தருவே

மண்ணுலகை ஆளவந்த மாமணியே

அடைந்தார்க்கு அருள் புரியும் ஆரமுதே

பெண்என்று பெயர் பெற்ற

பேரின்பப் பெட்டகமே

உன்னை....

இரந்தவர்க்கு இன்பம் உறுதி

துறந்தவர்க்குத் துன்பம் உறுதி!

 -----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –340.

 

தன்னேரிலாத தமிழ் –340.

அறிவுடையார்  ஆவது அறிவார்  அறிவிலார்

அஃதுஅறி கல்லா தவர். –குறள், 427.

 

 ‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு

செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக்

குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்

நறுமண இதழ்ப் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் (புதிய)

 

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க

புதுக்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்

அதற்கொப்ப வேண்டாமே நம்தமிழர் மேன்மை

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்

எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை

ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்.”

---புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், படம்: சந்திரோதயம்,1966.

திங்கள், 6 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –339.

 

தன்னேரிலாத தமிழ் –339.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். – குறள்.394.

 

உங்களிலே யானொருவன் ஓம்பேனோ இவ்வேனோ

திங்கள் குலனறியச் செப்புங்காள்சங்கத்துப்

பாடுகின்ற முத்தமிழ் என் பன்னூலும் ஏற்குமோ

ஏடவிழ்தார் ஏறெழுவீர் இன்று………….

 

தமியேன் பைந்தமிழ் அன்னையின் பாலருந்தித்

தவழ் பாலன்

தமிழ் வளர உயிர்வாழும் ஊழியன் என்று

உலகறியும்

தமிழரசி அங்கயர்க்கண் உமையன்னையே

தயவில்லையோ

தமியேனுக்கும் இதில் அமர இடமில்லையோ

தகவில்லையோ……(தமியேன்)

 

தருணம் வந்து எனை ஆளாய் சரணடைந்தேன்

இனித் தாளேன்

வரமருள்வாய் சபை நடுவே வரும் இழி

உந்தனைச் சாரும்……….. (தமியேன்)

குளிர்ந்த முகமெனும் இன்சொலும் கார்முகில்

போல்கொடையும்

தெளிந்த அறிவும் நிறை பணியாக அணிசீனக்கனை

மிளிர்ந்த பல்கலைவாணர் வந்தடைவதில்

விந்தை என்னே

அளித்த பலாக்கனி ஈக்களை வாவென்று

அழைப்பதுண்டோ..?

----கவிஞர் பாபநாசம் சிவன், படம் : சிவகவி, 1943.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –338.

 

தன்னேரிலாத தமிழ் –338.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.-குறள்.1228.

 

அன்புள்ள அத்தான் வணக்கம்உங்கள்

ஆயிழை கொண்டாள் மயக்கம்

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்

கண்ணிருந்தும் இல்லை உறக்கம் (அன்புள்ள)

 

மாலைப் பொழுது வந்து படை போலக் கொல்லும்

வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்

ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்

அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும் (அன்புள்ள)

 

பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே

பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே

கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை

 கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை (அன்புள்ள)

 

இப்படி எழுதியும் நான் வரவில்லையென்றால்….?

 

பொன்மணிமேகலை பூமியில் விழும்

புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்

கைவளை சோர்ந்து விழும் கண்களும் மூடும்

காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்

அன்புள்ள அத்தான் வணக்கம்

திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம் (அன்புள்ள)

---கவிஞர் கண்ணதாசன்,படம்: கைராசி,1960.