தமிழமுது -17
- காரல் மார்க்சு- பொன்மொழிகள்.
” பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால், நாம் பயந்து
பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக்
கவனமாக்கக் குறித்துக்கொள்ள வேண்டு. இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.”
“மகிழ்ச்சியைப்
பற்றி உங்களுடைய கருத்து..?
-போராட்டம்.”
“உங்களுக்குப் பிடித்தமான வாசகம்..?”
”எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு”
“இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன், உலகின்
அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன்.
அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்
என்மகிழ்ச்சியை நசுக்க முடியாது
அழிந்த நாட்டில் கடவுளைப் போல
வெற்றி முரசொலிக்க நான் வருகிறேன்
ஒவ்வொரு சொல்லும் செயலும் நெருப்பு
என் மார்பும் கடவுளைப் போன்றதே.”
“தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில்
அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே.”
”மக்கள் தங்களைப்பற்றியே ‘பயம் அடையும்படி’
கற்பித்தால்தான் அவர்களுக்குத் ‘துணிவு’ ஏற்படும்.”
“…நாம் ஒரு புதிய கொள்கையுடன்,
இது தான் உண்மை இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில்
உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய
கொள்கைகளை உருவாக்குகிறோம்.”
“நரகத்தின் வாயிலில் பின்வருமாறு
எழுதப்பட்டிருப்பதைப் போல விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தபட வேண்டும்.
“ இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுகள் ; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்,”
“உங்களுடைய முக்கியமான
குணம். கொள்கை உறுதி.?’
உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூதுரை..?”
”மனிதனுக்குரிய அனைத்தும் எனக்கும் உரியன…!”
…………………………………………………………….
” நான் மார்க்சையும் எங்கெல்சையும்
இன்னும் ‘நேசிக்கிறேன்’ அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் உண்மையான மனிதர்கள்..! நாம் அவர்களிடமிருந்து
கற்றுக்கொள்ள வேண்டும். ; அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது.” வி.இ.இலெனின்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக