தமிழமுது -27. - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முருகன்- – அறுபடைவீடு
1.)
திருப்பரங்குன்றம்:
”மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
கரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதல் பனிக்கடல் கலங்க உள்புக்கு
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” – 42 – 46.
முருகன் குறிஞ்சி நிலத் தலைவன், ஆதலின் அவனது
கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்புரைக்கப் பெற்றது.
குரங்குகளும் முற்றிலும் ஏறிப் பயின்று அறியா
மரங்கள் நெருங்கிச் செழித்துள்ள பக்க மலைச்
சாரலில் உள்ள வண்டுகளும் மொய்க்காத, சுடர் போலச் சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்துக்
கட்டிய குளிர்ந்த பெரிய மாலையை அணிந்த திருமுடியை உடையவனாக விளங்குகிறான் முருகன்.
நிலம் முற்றுப்பெற்ற
குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற , சுடர்விடுகின்ற
இலைவடிவாகிய நெடுவேல் கொண்டவன்.
(மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றியது கடல்
ஆதலான் பார் முதிர் பனிக்கடல் என உலகத்தோர்றம் குறித்தார் நக்கீரர்).
……………….தொடரும்……………………………..
2,) திருச்சீரலைவாய் – திருச்செந்தூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக