தமிழமுது -20 - கடவுள் கோட்பாடு -
தொல்தமிழர் வழிபாடு.
குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்நில மக்களின் வழிபாடு இயற்கை வழிப்பட்டனவாக உள்ளன.
ஆயினும் திருமால், விஷ்ணு, முருகன், சிவன், உருத்திரன், கொர்றவை என்று ஒன்றுபட்ட கடவுள்
தன்மைகளை சங்க இலக்கியங்கள் விளக்கி நிற்பதை மறுக்க முடியவில்லை.
1.)
பச்சிலை,
மலர் முதலானவற்றைத் தூவியும் நறை விரை புகைத்தும் பொங்கலிட்டுப் படைத்தும் அறுகம்புல்,
பூலாம்பூ, நெல், தினை, முதலியவற்றைத் தூவியும் சங்க கால மக்கள் கடவுளை வழிபட்டனர்.
2.)
ஆரிய
முறைப்படி சிலர் வடமொழி வேதம் ஓது வழிபட்டனர். தீ வளர்த்து, வேள்வியும் செய்தனர். உருத்திரன்,
சுப்பிரமணியன், கிருஷ்ணன் முதலான தெய்வங்கள் தொடர்பான கட்டுக்கதைகளைத் தமிழர் தெய்வங்களுக்கு
இட்டுக்கட்டி இணைத்துவிட்டனர்.
தெய்வங்கள்:
சிறு தெய்வங்கள் வழிபாடு ……..!
தென்புலத்தார்
நடுகல்
பேய்
தீமைதரும் விலங்குகள்
வான்சுடர்….. முதலானவை.
பெருந்தெய்வங்கள்:ஐந்திணை.
குறிஞ்சி – சேயோன்
முல்லை – மாயோன்
பாலை – காளி
மருதம் – வேந்தன்
நெய்தல் – வருணன்.
கோயில்:
நல்ல வீடு
தலைவன் வீடு
இறைவன் வீடு.
இயற்கையில் இறைவனைக்கண்ட தமிழர் மரத்தடியில் இறைவனை இருக்கச்
செய்தனர். மரப்பொந்தையே கோயில் என்றும் கொண்டனர். இன்று கோயிகளில் விளங்கும் தலமரம்
(தல விருட்சம்) இதன் எச்சமெனக் கருத இடமுண்டு. ஆற்றங்கரை, மலைச்சரிவு, குன்று, கடற்கரை
போன்ற இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் வழிபாடு நடந்தது.
சிறு தெய்வ வழிபாடு:
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக