தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -47.
முனைவர் இரெ. குமரன்: 1. நற்றிணை:
தொல்தமிழர் - வழிபாடு : சூருடைப் பலியொடு :
முல்லை:
“கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
கூழுடை நல்மனைக் குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை.......”
- நக்கீரர், 367 : 1 – 7.
வளைந்த கண்ணையும் கூரிய வாயையும் உடைய காக்கைப் பேடை நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டு தன் கிளையாகிய கக்கைகளை அழைக்கும் ; அக் காக்கைகள் கவர்ந்து கொள்ளுமாறு கரிய கண்ணை உடைய கருணைக் கிழங்கின் பொரியலோடு செந்நெல்லால் சமைத்த வெண்மையான சோற்றுப்பலியைத் தெய்வத்திற்கு இடுவர் ; அவ்வாறு தெய்வத்திற்கு இடும் குறுகிய கால்களை உடையதும் மிக்க உணவுப் பொருளை உடையதுமான நல்ல மனைகள் பலவாக அமைந்த பழமை மிக்க அருமன் என்பவனது பெரிய புகழ்மிக்க சிறுகுடி என்னும் ஊரின் கண் வாழும் மெல்லியலாகியப் பெண்ணே....”
( வினைவயிர் பிரிந்த தலைவன் குறித்துச் சென்ற படுவம் கடந்தது. இதனால் வருத்தமுற்ற தலைவியைத் தோழி நெருங்கி மடந்தாய்...! தலைவனுடன் சென்றிருந்த வீரர்கள் வந்துவிட்டனர் ; தலைவனும் விரைவில் வந்துவிடுவான் ; எனவே, நீ வருந்தாது இல்லறம் நடத்துவாயாக என்றது,)
( சிறை - சிறகு ; பயிர்ந்து - அழைத்து ; சூர் - தெய்வம். ; கவரிய - கவர ;கூழ் - பொருள் ; குழுவின - கூடின. ; பரியாது - வருந்தாது.)
................. 25 – 10 – 26 முதல்............தொடரும்.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக