ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-55.- ஓர் அறிவியல் அறிஞர்.
”தொல்காப்பியம் புள்ளி: (Dot)
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
இப்பதிவு கட்டுரைச் சுருக்கம் - முழுமையாகப் படிக்க விரும்புவோர் அமேசான் கிண்டில் பதிப்பில் ”பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் ”நூலினைக் காணவும்.
இடத்திற்கேற்றாற்போல ஒரு புள்ளி மதிப்பைப் பெறும் என்பதைக் கண்டறிந்தவர் தமிழர்.
புள்ளியை எழுத்தில் ஏற்றி மதிப்புறச் செய்தார் தொல்காப்பியர்.
எழுத்தில் மதிப்பைக் கூட்டவும் குறைக்கவும் பயன்பட்டதால் அது எண்ணிலும் ஏற்றம் பெற்றது. உலக கணக்கியல் வரலாற்றில் புள்ளி ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
எண்ணையும் எழுத்தையும் கண் எனப் போற்றிய தமிழர் எழுத்தை ஆக்கியதைப் போல எண்ணையும் ஆக்கினர். தமிழர் கணக்கியல் உலகத்தார் பார்வைக்குச் செல்லாததனால் வரலாறு தெளிவில்லாமல் கிடக்கிறது தமிழர் உலகெங்கும் பரவிய வரலாறு நம்மிடம் உள்ளது. நைல் நதிக்கரையிலிருந்து எகிப்தியர் (அலெக்சாண்டர்) இங்கு வந்தது கொண்டு போகவே ; கொடுத்துப் போக அல்ல. குறிப்பாக பதின்மான இலக்கம் (Decimal Notation) தமிழர்களிடம் இரண்டாயிரம் ஆண்டு்களுக்கு முன்பே வழக்கிலிருந்தது. பத்துப் பத்து பாடல் தொகை -பதிகம், இந்தப் பதின்மான முறை (Decimal System.) ஆனால் பதின்மான இலக்கம் கண்டுபிடித்தவர் தொல்காப்பியர் என்பது அவர்கள் அறியாது பெயர் தெரியாத இந்திய அறிஞர் ஒருவர் என்று குறித்துள்ளனர்.
(“Where as thae early Mnathematical work of India is chiefly attributed tho the far later AD 450 0 650/ So in the present state of our knowledge it is safest to assume that considerable independent work was done in India. An unnamed genius invented the decimal notation “ ) D.E. Smith and J.Ginsburg - The world of Mathematics P. 113.)
பதின்கூற்றுப் பின்னம் ; (Decimal System.) தசம பின்னங்களைக்குறிக்க ஒரு புள்ளி இடுவர். (Decimal Point) கணக்கியலில் 0.5 = 5/10 என்றவாறு தசம பின்னம் அமைகிறது. இவ்வாறு என்ணில் புள்ளியிட்டு அதன் மதிப்பை வேறுபடுத்திக் காட்டியவர்கள் எகிப்தியர்கள் கி.மு. 1700இல் எகிப்தியர்கள் எழுதிய நூலில் இக்குறிப்பைக்காணமுடிகிறது. மூன்றில் ஒரு பங்கு என்பதைக்குறிக்க மூன்று என்ற எண்ணின் மீது ஒரு புள்ளியிட்டனர் 2/3 என்பதைக்குறிக்க மூன்றின் மீது இரு புள்ளிகளை இட்டனர். . ..
3 3 புள்ளியின்றி இருந்தால் முழு எண். செமித்திய மொழியிலும் இம்முறை இருப்பதைக்காணமுடிகிறது. ...............................தொடரும்............................தொல்காப்பியம் சுட்டும்செய்யுள் உறுப்புகள் ...........................