திருக்குறள்
– சிறப்புரை :479
அளவறிந்து வாழாதான்
வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக்
கெடும்.
--- ௪௭௯
வருவாயின் அளவு அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் வாழ வழி தெரியாதவன் வாழ்க்கை,
எல்லாம் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தைத் தந்து
உள்ளவை எல்லாம் இல்லாதாகி அழியும்.
“
பரபரப்பினோடே பல பல செய்து ஆங்கு
இரவு
பகல் பாழுக்கு இறைப்ப ஒருவாற்றான்
நல்லாற்றின்
ஊக்கின் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான்
உய்வார் இவர். –நீதிநெறிவிளக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக