திருக்குறள்
– சிறப்புரை :492
முரண்சேர்ந்த
மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம்
பலவும் தரும். --- ௪௯௨
போரிடுவதில் வல்லமை உடையவர்க்கும் அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களைத்
தரும்.
“
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன்
தாங்கிய பெருமை ….. தொல்காப்பியம்.
காட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று
வென்ற பெருமை உடையவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக