திருக்குறள்
– சிறப்புரை :499
சிறைநலனும்
சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தொடு
ஒட்டல் அரிது. – ௪௯௯
பகைவர். அரண் வலிமையும் பிற சிறப்புகளும் இல்லாதிருப்பினும் அவர்கள் வாழும்
இடத்திலேயே சென்று போர் செய்து வென்றுவிடல் என்பது அரிய செயலாகும்.
“
புலி சேர்ந்து போகிய கல் அளைபோல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.”
– புறநானூறு.
புலி தங்கியிருந்து பின் இடம் பெயர்ந்து சென்ற கற்குகை போல. அவனைப் பெற்ற
வயிறு இதுவே. அவனோ போர்க் களத்தில் காணத்தக்கவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக