திருக்குறள்
– சிறப்புரை :474
அமைந்தாங்கு
ழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து
கெடும்.
---- ௪௭௪
ஒருவன், தக்கவரோடு இணக்கம்
கொள்ளாமல், செய்யக் கருதிய செயலின் தன்மையையும் தன் வலிமையையும் அறியாமல், தன்னையே
வியந்து பாராட்டிக்கொண்டும் இருப்பானாகில், அவன் விரைந்து கெடுவான்.
“வியவற்க
எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி
பயவா வினை. –குறள். 439
ஒருவன், எக்காலத்தும் தன்னைத்தானே வியந்து போற்றிக் கொள்ளக்கூடாது ; நன்மைதராத
செயலை விரும்பவும் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக