திருக்குறள்
– சிறப்புரை :480
உளவரை தூக்காத
ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக்
கெடும்.
----- ௪௮௰
தன்னிடமுள்ள பொருளின் அளவினை ஆராய்ந்தறியாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினாலும்
செல்வவளம் விரைந்து தேய்ந்து அழியும்.
“
தன் அறி அளவையின் தரத்தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் ”
--- பொருநராற்றுப்படை.
கரிகாலன் , தன் தகுதி அறிந்து தரத்தர, யானும் என் தகுதியின் அளவு அறிந்து
விரும்பியவற்றை யெல்லாம் வாரிக்கொண்டு, இனி எக்காலமும் எனக்கு வறுமை இல்லையாகும்படி
வந்தேனாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக