திருக்குறள்
– சிறப்புரை :490
கொக்கொக்க
கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க
சீர்த்த இடத்து. ----- ௪௯௰
அசைவற்று உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போலக் காலம் கனியும்வரை
காத்திருந்து ; உறு மீனைக் கொத்தி எடுக்கும் கொக்கினைப் போலத் தக்க நேரத்தில் பகையை
அழிக்க வேண்டும்.
“கருதியது
முடிக்க உறுதிகொள் காலம்
கைவிடாது
காக்கும் நன்றே.”
நன்மொழி ஆயிரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக