திருக்குறள்
– சிறப்புரை :498
சிறுபடையான்
செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம்
அழிந்து விடும். ---- ௪௯௮
சிறிய படை உடைய அரசனும் போரில் வெல்வதற்குரிய சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பானாகில்
பெரும் படை உடைய அரசன் பொருந்தா இடத்தில் நின்று
ஊக்கம் இழக்கவும் படையும் அழிந்து கெடும்.
“
குடப்பால் சிலுறை போலப்
படைக்கு
நோய் எல்லாம் தான் ஆயினனே.” – புறநானூறு.
குடம் நிறைந்த பாலின்கண் தெளிந்த சிலவாகிய பிரை. பால் முழுவதையும் கெடுத்துவிடுவதைப்
போல. பகைவரின் படைத்திரள் முற்றும் கெட்டு அழிய. அவன் ஒருவனே காரணமாயினன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக