திருக்குறள்
– சிறப்புரை :473
உடைத்தம் வலியறியார்
ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார்
பலர்.
--- ௪௭௩
தம் வலிமை அறியாது வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இடையிலேயே
தோல்வியைத் தழுவியோர் பலராவர்.
“செய்வினை
முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்…
--- நற்றிணை.
தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது,இழிவைத்
தருவதோடு, அறியாமையையும் வெளிப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக