திருக்குறள்
– சிறப்புரை :468
ஆற்றின் வருந்தா
வருத்தம் பலர்நின்று
போற்றினும்
பொத்துப் படும். ----
௪௬௮
ஆராய்ந்து வழிவகுத்துத் தொடங்கப்படாத எந்த ஒரு செயலும் நிறைவேறாது, பலர்
முன்னின்று ஊக்கினும் அச்செயல் அரைகுறையாகவே நின்றுபோகும்
“
இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை….
:” நாலடியார்.
எடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை
முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.
திருக்குறளில் பொதுமையாக உள்ளது. ஆனால் நாலடியாரில் ஆண்மைக்கு அழகு என்றுள்ளதே. (அங்கு பெண்மை சேர்க்கப்படவில்லையா, அல்லது ஆண்மை என்பது பொது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா)இரண்டும் பொருந்தி வருவதாகக் கூறமுடியுமா? தெளிவிற்காகக் கேட்கிறேன்.
பதிலளிநீக்கு