திருக்குறள்
– சிறப்புரை :451
அதிகாரம்
: 46 – சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும்
பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து
விடும்.
--- ௪௫௧
பெருமை
உடையவர்கள் சிறுமைக்குணம் கொண்டவர்களோடு சேராது விலகியே இருப்பார்கள் ; அற்பர்களோ அவர்களையே தமது சுற்றமாகக்கொள்வார்கள்.
“ பொய்ப் புலன்கள்
ஐந்தும் நோய் புல்லியர்பால் அன்றியே
மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம் – துப்பின்
சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறு புள் துரும்பு.” --- நன்னெறி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக