திருக்குறள்
– சிறப்புரை :455
மனந்தூய்மை
செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை
தூவா வரும். ---- ௪௫௫
மனத்தூய்மையும்
செய்யும் தொழில் தூய்மையும் ஆகிய இவ்விரண்டும்
தான் சேர்ந்த இனத்தின் தூய்மையைத் துணையாகக் கொண்டு வெளிவரும்.
”இனத்தினான்
ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான்
ஆகும் மதி.” ----சிறுபஞ்ச
மூலம்.
மக்களுக்குத்
தத்தம் தீய சேர்க்கையால் பழியும் , நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக