திருக்குறள்
– சிறப்புரை :467
எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது
இழுக்கு.
--- ௪௬௭
ஒரு செயலைத் செய்யத் தொடங்குமுன் அச்செயலை எவ்வாறெல்லாம் நிறைவேற்றலாம்
என்று நன்றாக அலசி ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும், களத்தில் இறங்கிவிட்டு ஐயங்கொண்டு
ஆராயமுற்படுவது குற்றமாகும்.
“
நனி அஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்….”
--- பழமொழி.
செய்யத்தக்கதைச்செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும்
அஞ்சார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக