திருக்குறள்
– சிறப்புரை :463
ஆக்கம் கருதி
முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை
யார்.-----
௪௬௩
மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதிப் போட்ட முதல் அழியத்தக்க
செயல்களைச் செய்வாரை அறிவுடையார் எவரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.
“
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்…”
– பழமொழி.
அறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம் குலம் முதலானவற்றால் பெருமை
பெறுதல் இல்லை.
ஒவ்வொரு நாளும் முத்தான கருத்துக்களைக் கொண்டுவரும் உங்கள் பதிவு. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.
பதிலளிநீக்கு