திருக்குறள்
– சிறப்புரை : 449
முதலிலார்க்கு
ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை. --- ௪௪௯
உழைப்பு என்னும் முதல் இல்லாதவர்களுக்கு ஊதியமில்லை ; அதுபோல் தமக்குத்
துணையாக, வழிகாட்டியாக இருந்து காப்பாற்றுவாரைச் சார்ந்திராதவர்களுக்கும் நிலையான வாழ்க்கை
இல்லை.
“நல்லாரைக்
காண்பதுவும் நன்றே நலம் மிக்க
நல்லார்
சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள்
உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. --- வாக்குண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக