திருக்குறள்
– சிறப்புரை :462
தெரிந்த இனத்தொடு
தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள்
யாதொன்றும் இல்லை. ----
௪௬௨
செய்யக் கருதிய செயலைஅறிவிற் சிறந்த சுற்றத்துடன் கலந்தாய்வு செய்வதோடு
தானும் நன்கு ஆராய்ந்து செயல்படுவார்க்கு செய்வதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லை.
”
கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்.” –
பழமொழி
சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல் திறனில் சிறந்து. தான் மேற்கொண்ட
செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக