திருக்குறள்
– சிறப்புரை : 450
பல்லார் பகைகொளலிற்
பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை
விடல்.
---- ௪௫௰
பலரையும் பகைத்துக்கொள்வதைக் காட்டிலும் பத்துமடங்கு தீமைதருவது பெரியோர்தம்
துணையைக் கை நழுவ விட்டுவிடுவது.
“
நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.:”
– நாலடியார்,
நல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர், நல்லவர் அல்லர்
எனக் கண்டபோதிலும் குற்றங் குறைகளைப் பெரிது படுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக் கொள்ள
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக