திருக்குறள் -சிறப்புரை :838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.--- ௮௩௮
பேதையானவன் தன் கையில் உடைமையாக ஒரு பெற்றுவிட்டால் பித்துப்பிடித்தவன்
கள்ளையும் உண்டு மயங்கியதற்கு ஒப்பாவான்.
“ முந்திரி மேல் காணி மிகுவதேல்
கீழ் தன்னை
இந்திரனாக எண்ணிவிடும்.” –நாலடியார்.
முந்திரியின் அளவுக்குமேல் காணி
அளவு செல்வம் மிகுந்து விடுமாயின் கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று
எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.( முந்திரி – 1/320
; காணி- 1/80)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக