87. பகை மாட்சி
திருக்குறள் -சிறப்புரை :861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. --- ௮௬௧
(மாறு ஏற்றல்)
தம்மைவிட வலியவரைப் பகைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் ; தம்மைப் போற்றாத
மெலியாரிடத்துத் தோன்றும் பகைமையை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன்.”
---புறநானூறு.
தன்னைவிட வலியவர் என்று கருதி
எவரையும் வணங்கி வழிபடான் ; எவரையும் இவர் எளியவர் என்று கருதித் தன்னைத்தானே புகழ்ந்து
கூறிக்கொள்ள மாட்டான்.(நெடுஞ்செழியன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக