திருக்குறள் -சிறப்புரை :858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.--- ௮௫௮
மனத்தில் எழும் காழ்ப்புணர்ச்சிக்கு
இடம் கொடுக்காமல் அதனை நீக்குதல் ஆக்கம்தரும், அப்படிச் செய்யாமல் அவ்வுணர்ச்சியை மேலும்
மேலும் ஊக்கப்படுத்துவானாயின் அவன் தனக்குத் தானே
கேட்டினை ஊக்கப்படுத்திக் கொண்டவனாவான்.
“ தீதும் நன்றும் பிறர்தர
வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.”—புறநானூறு.
நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ; துன்பம் நேர்தலும் அது
தீர்தலும் கூட நம்மால் விளைவதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக