திருக்குறள் -சிறப்புரை :862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. --- ௮௬௨
ஒருவன் தன்னைச்சார்ந்தாரிடத்தும் அன்பு இல்லாதவனாய் ; துன்பத்தில் துணையாகும்
நல்ல துணை இல்லாதவனாய் ; தானும் வலிமையற்றவனாய் இருந்தால் அவனால் எப்படிப் பகைவரின்
வலிமையை வெல்ல முடியும்..?
“இசையாது எனினும் இயற்றி
ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை…”
---நாலடியார்.
ஒரு செயலைச் செய்ய இயலாது என்றாலும் மன வலிமையால் அச்செயலை வென்றெடுக்க
முயல்வதே ஆண்மைக்கு அழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக