திருக்குறள் -சிறப்புரை :863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.---- ௮௬௩
அஞ்சி ஒடுங்கும் ஆண்மையற்றவனாக; அறிவற்றவனாக; பிறரிடத்து அன்புடன் பழகும்
தன்மையற்றவனாக; ஈகை குணம் இல்லாதவனாக ஒருவன் இருப்பானாயின் அவன் பகைவர்க்கு மிகவும்
எளியவன் ஆவான்.
” எங்கண் ஒன்று இல்லை எமர்
இல்லை என்று ஒருவர்
தங்கண் அழிவு தான் செய்யற்க…”---பழமொழி.
என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை ; எனக்கென்று
உறவினர்களும் இல்லை ; என்று ஒரூவர் மனம் தளர்ந்து தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ளும்
செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக