மடகாசுகர் – சல்லிக்கட்டு--2
கோண்டுவானா
மடகாசுகர் தீவும் தென் இந்தியாவும் பசிபிக் தீவுகளிற் பலவும் இலெமூரியாவின்
மீந்த பகுதிகள் ஆகும்.
அந்நாளில் நீர்மட்டத்திற்கு
மேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே. மற்ற இன்றைய கண்டங்களெல்லாம் நீருள் அமிழ்ந்தும்
அமிழாதும் இருந்த சதுப்பு நிலங்களே. –கா. அப்பாத்துரை.
மடகாசுகர்
தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானா கண்டத்திலிருந்து
பிரிந்து விட்டதாகவும், எட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாசுகர் தீவிலிருந்து இந்தியாவும்
பிரிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் மடகாசுகர்
தீவுக்கும் ஆத்ரேலியா கண்டத்துக்கும் இடையில் ஆசியா கண்டத்தின் வழியாக நிலத்தொடர்பு
இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்கின்றனர்.
தொல்
பழங்குடி
தமிழர் வரலாறு கால எல்லைகளைக் கடந்து முன்னேறிச்
செல்கிறது. தமிழ் மொழியும் பண்பாடும் உலகில் இன்னின்ன இடங்களில் இன்னின்னவாறு இருந்தன
என்று கணிக்க இயலாத அளவுக்குத் தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
மடகாசுகர் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தொல்பழங்குடியினர்
பற்றிய ஆவணப் படம் ஒன்றை 25-05-18 அன்று டிஃச்கவரி-தமிழ்
ஒளிபரப்பியது.
வாழ்க்கை
முறை
மடகாசுகர் தீவில் பழங்குடியினர், நல்ல இயற்கைச் சூழலோடு பொருந்தி வாழ்ந்து
வருகின்றனர். மூன்று வேளையும் அரிசி உண்வையே உண்டு வருகின்றனர். மாடுகள் செல்வமாக மட்டுமின்றித்
தெய்வமாகவும் போற்றப்படுகின்றன. காளைகளில் அழகும் இளமையும் வலிமையும் உடைய காளைக்குத்
தாம் வழிபடும் தெய்வத்தின் பெயரைச் சூட்டி வளர்க்கின்றனர்.
சல்லிக்கட்டு
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டாகிய சல்லிக்கட்டு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசவெளி நாகரிகத்தோடு தொடர்புடையது
என்பது யாவரும் அறிந்ததே.
Jallikattu–Bull Taming Sport in India
The history of Jallikattu can be traced back to the Indus
Valley Civilization, more than 5000 years ago, making it one of the oldest
surviving tradition in the world. A well-preserved seal was found at
Mohenjodaro in the 1930s which depicts the bull fighting practice prevalent
during the Indus Valley Civilization –தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக