திங்கள், 21 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :883


திருக்குறள் -சிறப்புரை :883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். --- ௮௮௩
(உலைவு இடத்து)
உட்பகைக்கு அஞ்சித் தக்க நேரத்தில் ஒருவன்  தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் குயவன் பசிய மண்கலத்தை அறுத்து எடுப்பதைப்போல் உட்பகை  அவனை அடியோடு அழித்துவிடும்.
“உள்ளத்தான் நள்ளாது உறுதித்  தொழிலர் ஆய்க்
கள்ளத்தான் நட்டார் கழி கேண்மை –தெள்ளிப்
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூங்குன்ற நாட
மனத்துக்கண் மாசாய் விடும். –நாலடியார்.
  சேற்றைப்போக்கித் தெளிவாய் நிற்கும் அருவி நீர் பொழியும்  அழகிய மலையுள்ள நாட்டை உடையவனே…!  மனத்தால் விரும்பாமல் உண்மையாக அன்புடையவர் என்று நம்பத்தக்க உறுதியான செயல்களைச் செய்யும் வஞ்சகமானவர்களுடைய நெருக்கமான உறவானது மனதில் குற்றம் உள்ளதாய் நிற்கும்; அதற்கு அஞ்ச வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக