திருக்குறள் -சிறப்புரை :882
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.--- ௮௮௨
வாள் போல் நேருக்கு நேர் நின்று ஏதிர்க்கும் பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டாம்
; உறவினர்போல் உடனிருந்து கேடு செய்யும் உட்பகைக் கொண்டோரைக் கண்டு அஞ்சி ஒதுங்க வேண்டும்.
“ நெஞ்சு அறிந்த கொடியவை
மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி
இல்லை….” –கலித்தொகை.
தம் நெஞ்சு அறியத் தாம் செய்த தீவினைகளைப் பிறர் அறியாதவாறு மறைக்கவும்
செய்வர், ஆயினும் அவர் தம்முடைய நெஞ்சுக்கு மறைத்தல் இயலாது. நெஞ்சத்தைக் காட்டிலும்
அணுக்கமான சான்று வேறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக