செவ்வாய், 8 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :870


திருக்குறள் -சிறப்புரை :870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.--- ௮௭0
அறநூல்களைத் தேர்ந்து கல்லாதவனைப் பகைத்துக்கொள்வதால் வரும் எளிய பொருளை(இழப்பினை) விரும்பி ஏற்றுக்கொள்ளாதவனை எக்காலத்தும் புகழ்,  விரும்பி வந்து சேராது .  
“எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.”—நாலடியார்.
கல்வியைப்போல் அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக