ஞாயிறு, 13 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :875


திருக்குறள் -சிறப்புரை :875
தன்துணை இன்றால் பகைஇரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. ---- ௮௭
(கொள்க அவற்றின்)
தனக்குத் துணை என்று எவரும் இல்லாது தனித்து நிற்கும்  நிலையில், தன் மீதுவந்த பகை இரண்டனுள் ஒன்றினைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
” பற்றா மக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்” –மணிமேகலை.
பகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக