வியாழன், 24 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :885


திருக்குறள் -சிறப்புரை :885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவுந் தரும்.--- ௮௮௫
உறவு முறைமை உடைய ஒருவனிடத்து உட்பகை தோன்றிவிடின் அஃது ஒருவன் இறப்பதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் தரும்.
“ தெரிவுடையார் தீஇனத்தார் ஆகுதல் நாகம்
  விரி பெடையோடு ஆடி விட்டற்று.” –நாலடியார்.
 தெளிந்த அறிவுடையவர்கள் தீமை செய்யும் சிற்றினத்தாரோடு உறவுடையவராய் இருப்பது, நாகப் பாம்பு, பெட்டை விரியன் பாம்பொடு புணர்ந்து நீங்கினது போலாம்.
(நாகம், பெண் விரியன் பாம்பொடு புணர்ந்தால் இறந்துபடும் என்பர். அறிவியல் நோக்கில் ஆய்க.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக