திருக்குறள் -சிறப்புரை :886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.---- ௮௮௬
(கண்படின்)
ஒன்றிணைந்து வாழும் சுற்றத்தாரிடத்தே உட்பகை தோன்றிவிடின், அழியாமல் இருப்போம்
என்பது எக்காலத்தும் அரிதாம்.
” முட்டிகை போல முனியாது
வைகலும்
கொட்டி உண்பாரும் குறடுபோல்
கைவிடுவர்.”—நாலடியார்.
தன்னை வெறுக்காமல் இருக்கும்படி,
சம்மட்டியைப்போலே அடிமேல் அடிவைத்துப் பிறரைத் தன்வயப்படுத்தி நாள்தோறும் உண்பவர்களும்
காலம் வாய்த்தால் பற்றுக் குறடைப் போல் கைவிட்டு நீங்குவர். ( சம்மட்டி இரும்பை அடித்துப்
பதமாக்குவதைப்போல் பிறரைத் தன் விருப்பத்திற்கு இசைந்து நடக்குமாறு செய்துவிடல்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக