திருக்குறள் -சிறப்புரை :876
தேறுனும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.----- ௮௭௬
பகைவனை முன்பே ஆராய்ந்து அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும்
தனக்கு அழிவு வந்துற்றபோது அப்பகைவனிடத்துச் சேராமலும் அவனை நீக்கி வைக்காமலும் நடுநிலையுடன்
வாளாயிருத்தல் வேண்டும்.
“ பலநாளும் பக்கத்தார் ஆயினும்
நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்..”
–நாலடியார்.
பல நாள்களும் அருகில் இருப்பவரானாலும் தம் மனதில் சில நாள்கள்கூட ஒட்டாதவரோடு
சேர மாட்டார்கள் அறிவாளிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக