திருக்குறள் -சிறப்புரை :888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உள்ள குடி.---- ௮௮௮
உட்பகை உண்டான குடும்பம், அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்பு தேய்ந்து இற்றுப்போய்
விடுவதைப் போல, உறவுகள் சிதைந்து அழியும்.
இன்சொல்லான் ஆகும் கிளைமை
இயல்பு இல்லா
வன் சொல்லான் ஆகும் பகைமை…..”---சிறுபஞ்சமூலம்.
இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக