திருக்குறள் -சிறப்புரை :869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.--- ௮௬௯
(சேண் இகவா)
அறிவற்ற, எதற்கும் அஞ்சும் இயல்புடைய ஒருவனின் பகையைப் பெற்றால் அப்பகையைப்
பெற்றவர்க்கு இன்பம் வெகுதொலைவில் இல்லை.
“ …… ……. ….. ……………. நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம்
இல்லார்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.”
---நாலடியார்.
நுட்பமான நூல்களைக் கற்று அறிவு பெறாத பயனற்றவர்களுடன் உறவாடல் நரகங்களுள் ஒன்று.
(அறிவற்றவர் நட்பு நரக வேதனையைத் தரும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக