வியாழன், 31 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :892


திருக்குறள் -சிறப்புரை :892
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும். ---- ௮௯௨
பேரறிவாளர்களாகிய சான்றோரைப் போற்றி ஒழுகாமல் நடந்துகொண்டால் அது வாழ்வில் நீங்காத துன்பத்தைத் தரும்
“பொறுப்பார் என்று எண்ணி புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் …..” ---நாலடியார்.
நாம் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக்கொள்வர் என்று எண்ணி, அப்பழுக்கற்ற சான்றோர்கள் வெறுக்கும்படியான செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக