புதன், 9 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :871


திருக்குறள் -சிறப்புரை :871
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.---- ௮௭௧
பகை என்னும் பண்பு இல்லாத அஃதாவது தீமை பயக்கும் ஒன்றினை , ஒருவன் விளையாட்டாகக்கூட விரும்பக் கூடாது.
“ஓக்கிய ஒள்வாள் ஒன்னார் கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பது மெய்யாகும்…” நாலடியார்.
ஒருவன்  பகைவனைக் கொல்வதற்கு வீசிய வாள், தவறிப்போய் பகைவன் கையில் சேர்ந்தால் , வாள் வீசியவனின் துணிவு அழிந்துபோகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக