மடகாசுகர்
– சல்லிக்கட்டு
இலெமூர்
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு.
உலகிலேயே நான்காவது பெரிய தீவு. மக்கள் தொகை (2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி)
19,448815. மொழி, மலகாசி /பிரஞ்சு / ஆங்கிலம். உலகில் அரிய உயிரினங்கள் வாழும் இடம்..
” முதனி” – எனப்படும் தலையாய உயிரினத்தைச்
சேர்ந்த வரிவால் – நரிமுகக் குரங்குகள் – ”
இலெமூர் “ உலகில் வேறெங்கும் காணமுடியாத
உயிரினம்.
மலைப்பாம்பு
மலைப்பாம்புகளில் “பைத்தானிடே
“ என்றழைக்கப்படும் முட்டையிடும் மலைப்பாம்புகள் தொன்மையான இனமாகக் கருதப்படுகிறது.
இதில் 26 இனங்கள் உள்ளன. இவ்வகைப்பாம்புகள் பழைய உலகம் எனேஉ அழைக்கப்படும் ஆப்பிரிக்கா,
ஆத்ரேலியா, ஆசியா கண்டங்களிலும் இந்தோனீசியா, பிலிப்பைன்சு, பாப்புவா நியு கினியா தீவுகளிலும்
காணப்படுகின்றன.-விக்கிப்பீடியா.
மேற்குறித்துள்ள கண்டங்களும்
தீவுகளும் தொல்தமிழகத்தோடு நெருங்கிய உறவுடையவை.
மாசுணம்
“மைந்துமலி சினத்த களிறு மதனழிக்கும்
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி”—மலைபடுகடாம்,(260-261)
வலிமிகும் சினங்கொண்ட யானையின் வலிமையைக் கெடுத்து, அதனை விழுங்கும்
ஆற்றலுடைய, அகன்ற படத்தினையும் அழகிய கண்ணினையும் விழுந்து கிடக்கும் பெரிய மரங்களைப்
போன்ற தோற்றத்தையும் கொண்ட பெரும் பாம்பு கிடக்கும் வழியை விலக்கிச் செல்க.
அகல்வாய் பாந்தள்—அகநானூறு, 68.
களிறு பாந்தள் பட்டென..—நற்றிணை, 14.
பாந்தள்-(Python)
மாசுணம் – பெரும்பாம்பு
--(Rock Snake, Phythonidae)
Anaconda –ஆனைகொண்டான், ஆனை கொன்றான்.
இத்தகைய பழந்தமிழ்ப்புலவர்களின் பதிவுகள் தொல் தமிழகத்தின் வரலாற்றை
அறிய துணைபுரிகின்றன.-----தொடரும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக